நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே தேசிய விருது கிடைக்காத காரணம் என்ன? நடிக்கத் தெரியவில்லை என்று சொன்ன பிரபலம்!!

583

சிவாஜி……….

தன்னுடைய நடிப்பால் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த சிவாஜி கணேசனுக்கு தற்போது வரை தேசியவிருது கிடைக்கவில்லை என்பது பலருக்கும் தெரிந்திராத ஒன்று. அதற்கான காரணம் என்ன என்பது தற்போது வரை புரியாத புதிராக உள்ளது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே ஒரு காட்சியை எப்படி நடிக்க வேண்டும் என கற்றுக் கொடுத்தவர் சிவாஜி கணேசன். அவரது ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அப்படி மெனக்கெடல் இருக்கும்.

அதுவும் பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களில் அவர் நடித்த நடிப்பு இன்றும் பேசப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதற்குமேல் சிறந்த நடிப்பை காட்டுபவர்களுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது சிவாஜியின் நடிப்பு.

அப்பேர்பட்ட சிவாஜி கணேசனுக்கு ஏன் தற்போது வரை தேசியவிருது கிடைக்கவில்லை என்ற கேள்வி ஒவ்வொரு ரசிகர்களும் இருந்து வருகிறது. சிவாஜி காலகட்டத்தில் இருந்த பெரும்பாலான நடிகர்களுக்கு அந்த விருது கிடைத்தது.

சிவாஜியை விட சுமாரான நடிகர்களுக்குக்கூட தேசிய விருது கிடைத்துள்ளது. இதைப்பற்றி சித்ரா லட்சுமணன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில், மற்றவர்களைப் போல சிவாஜி கணேசனுக்கு நடிக்கத் தெரியவில்லை என்று நினைத்ததால் தேசிய விருது கொடுக்கவில்லை போல என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றே சிவாஜி கணேசன் தேசிய விருதுக்கு புறக்கணிக்கப்பட்டாரா என்ற ஒரு கேள்வியும் நீண்ட நாட்களாக பத்திரிகைகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வருகிறது. இதற்கான உண்மை காரணம் என்னவாக இருக்கலாம் என்பதை ரசிகர்கள் கமெண்டில் தெரிவிக்கலாம்.