இனிமேல் பெரிய நடிகரை வைத்து படமே கிடையாது.. பிகில் படத்தால் நொந்துபோன ஏஜிஎஸ் நிறுவனம்..!

691

ஏஜிஎஸ் நிறுவனம்…

மினிமம் பட்ஜெட்டில் படம் தயாரித்து நல்ல லாபம் பார்த்துக் கொண்டிருந்த ஏஜிஎஸ் நிறுவனம் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை ஒரே ஒரு பெரிய படத்தை எடுத்து வீணாய் போய் விட்டதாம்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே தரமாக இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உண்டு. அந்த அளவுக்கு உண்மையாலுமே தரமான படங்களை கொடுத்துள்ளனர்.

பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ என்பதெல்லாம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்களை எடுத்து வந்தனர். அவர்கள் முதன் முதலில் மிகப்பெரிய பட்ஜெட் போட்டு எடுத்த படம் பிகில் தான்.

ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்ததில் தவறில்லை. ஆனால் இயக்குனராக அட்லீயை தேர்வு செய்தது தான் அவர்களுக்கு ஆபத்தாக முடிந்துள்ளது. அட்லீயை பற்றி ஆரம்பத்திலிருந்தே குறித்த பட்ஜெட்டில் படம் செய்ய மாட்டார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக பரவி வந்தது.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் சொல்லிவிட்டார் என்பதற்காக அட்லீயை உள்ளே இழுத்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டது ஏஜிஎஸ் நிறுவனம். உண்மையாலுமே பிகில் படத்தை வாங்கி விநியோகம் செய்து அனைவருக்குமே பெரிய லாபம் கிடைத்துள்ளது. ஆனால் அட்லீயால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம் என்பதை வெளியில் சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் காரணமாக இன்னும் சில வருடங்களுக்கு பெரிய நடிகர்களின் படங்களை தயாரிக்காமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சின்ன சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.