சித்து..
விஜய் தொலைக்காட்சியில் அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு புது சீரியல் என்றால் அது ராஜா ராணி 2 தான். Diya Aur Baati Hum என்கிற ஹிந்தி சீரியலின் ரீமேக் இது.
இதில் நாயகனாக திருமணம் சீரியல் மூலம் பிரபலமான சித்து என்பவரை முக்கிய நாயகனாக நடித்து வருகிறார்.
அவருக்கு ஜோடியாக எல்லோருக்கும் பரீட்சயப்பட்ட ஆல்யா மானசா நாயகியாக நடித்து வருகிறார்.
அண்மையில் நடந்த விஜய் டெலி விருதில் சித்து அறிமுகமாக நாயகன் என்கிற விருதும், ஆல்யாவிற்கு சிறந்த மறுமகள் என்கிற விருதும் கிடைத்தது.
சித்து திருமணம் சீரியலில் தன்னுடன் நடித்த ஸ்ரேயா என்பவரை காதலிப்பது எல்லோருக்கும் தெரியும்.
இவர்களது திருமணம் எப்போது என்று கேட்டால் சித்து, திருமணம் பொறுமையாக செய்து கொள்கிறோம், நாங்கள் இன்னும் கொஞ்சம் காதலித்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.