மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்த படத்தின் படப்பிடிப்பு இதுதானா?- வீடியோவுடன் இதோ!

604

நடிகர் விவேக்..

நடிகர் விவேக் சிரிப்பு, சிந்தனை, சமூக அக்கறை என இவர் பெயர் சொன்னதும் இதுபோன்ற விஷயங்கள் தான் முதலில் நியாபகம் வரும்.

எல்லோரும் விரும்பிய அப்துல் கலாம் அய்யாவின் கனவை நினைவாக்க அயராது உழைத்தார். 30 லட்சத்திற்கும் மேல் செடிகள் நட்ட விவேக்கிற்கு 1 கோடி வரை மரங்கள் வளர்க்க வேண்டும் என்பது ஆசை.

ஆனால் அது நடக்கவில்லை, அவர் மறைவால் தற்போது அவரது கனவை தங்களது கனவாக மக்கள் கொண்டுள்ளனர். பலர் விவேக் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மரக்கன்றுகள் நட்டு வருகிறார்கள்.

கமல்ஹாசன் அவர்களுடன் மட்டும் நடிக்கவில்லை என்கிற வருத்தம் அவருக்கு இருந்தது, ஆனால் அதுவும் இந்தியன் 2வில் நடக்க இருந்தது, அது முழுமை அடையாமலேயே விவேக் மறைந்துவிட்டார்.

தற்போது விவேக் அவர்கள் கடைசியாக கலந்துகொண்ட படப்பிடிப்பின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அவரது கடைசி வீடியோ,