கவினுக்கு பிக்பாஸ் வைத்த ஆப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது உள்ளே 7 பேர் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதில் ஒவ்வொருவரும் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். காரணம் அனைவரின் உறவுகளும் உள்ளே வந்துள்ளதால் தான்.
இன்று கவினின் நண்பர் பிரதீப் உள்ளே வருகிறார். அப்போது கவின் இவனை இப்போதே அனுப்பிவிடுங்கள், இவனை அனுப்பாதீங்ககனு சொன்னேனே பிக்பாஸ், அவனுக்கு எனக்கு கருத்து ஒத்துவராது என கூறுகிறார்.
அதற்கு அவரின் நண்பர் கவின் சுயநலமாக தன்னை புத்திசாலியாக நினைத்துக்கொண்டிருக்கிறான், நல்லவர்களை கெட்டவர்கள் என நினைக்கிறான் என கூறினார்.
மேலும் கவின் நீ உன் விளையாட்டை விளையாடு, நீ யாருக்கும் விட்டுக்கொடுக்க வேண்டாம், நீ வெற்றி பெறுவாய் என எதிர்பார்த்திருக்கும் நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நீ செய்வது கடுப்பாக இருக்கிறது. அப்பா, அம்மாவை நினைத்து பார் என அடுக்ககாக பல கேள்விகளை கவினிடம் கேட்கிறார்.
கவினுக்கு யாரும் பாவம் பார்க்கவேண்டாம். எதிர்த்து நில்லுங்கள். அப்போது தான் அவன் விளையாடுவான். ஒரு கட்டத்தில் கவினை ஓங்கி கன்னத்தில் அவர் அறைந்துவிடுகிறார். கவினை அனைவரும் காதல் மன்னன் என கூறுவதுண்டு.