அஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல்..!

990

வலிமை…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் நடிக்கிறார்.

அஜித் – எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார்.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை ஸ்பெயின் நாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் தற்போது உலகமெங்கிலும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் ஸ்பெயினுக்கு சென்று படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லையாம்.

இதனால் அந்த சண்டைக் காட்சியை இந்தியாவிலேயே படமாக்கலாமா? என்று வலிமை படக்குழு யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் வலிமை படத்தின் ரிலீசும் தீபாவளிக்கு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.