தர்ஷண் அம்மா, தங்கை சொன்ன அந்த ஒரு வார்த்தை
தர்ஷணின் அம்மா மற்றும் தங்கை இருவரும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு நியூ படத்தில் இருந்து காலையில் தினமும் கண்விழித்தால் நான் கை தொழும் தெய்வம் அம்மா என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.
அவர்களை பார்த்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. அனைவரும் அவர்களோடு கலந்துரையாடினார்கள். பின் தர்ஷணின் தங்கச்சி சாண்டி அண்ணா இல்லையெனில் இந்த சீசன் 3 போர் என கூறினார்.
அதே போல தர்ஷணின் அம்மாவும் கூறினார். உடனே எல்லோரும் சாண்டியை கிண்டலடித்தனர். பின்னர் தர்ஷணின் அம்மா சியாமளாவுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பின் பிக்பாஸ் குரலில் வாழ்த்து கூறினார். உடனே சாண்டி சொல்வது போல சியாமளா நன்றி குருநாதா என கூற அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.