பாடகி தீ…
சமீபத்தில் குக்கூ குக்கூ என்ற பாடல் செம வைரலானது அனைவருக்குமே தெரியும். இந்திய அளவில் ட்ரண்ட் ஆன அந்த பாடலில் நடித்திருந்தவர் தீ(Dhee). இவர் வெளிநாடுகளில் பட்டப்படிப்பை முடித்தவர்.
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் இவர் பாடிய காட்டுப்பயலே பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். ஆனால் அதுவரை ரசிகர்களுக்கு இவர் ஒரு வடமாநில பாடகி என்பது போன்ற பிம்பம் தான் ஏற்பட்டது.
தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தோஷ் நாராயணன் மகள் இந்த பிரபல பாடகி தீ என்பது பலருக்கும் தெரியாத செய்தி தான்.
சமீபத்தில் வெளியான என்ஜாய் எஞ்சாமி என்ற பாடலின் வெளியீட்டு விழாவில்தான் அவர் சந்தோஷ் நாராயணன் மகள் என்பதே பலருக்கும் தெரியும்.
கதைக்கு அதிக வலுவுள்ள திரைப்படங்களுக்கு பல இயக்குனர்களின் முதல் சாய்ஸாக இருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மட்டுமே. சமீபத்தில் வெளிவந்த கர்ணன் படமே அதற்கு பறைசாற்றும் விதமாக அமைந்தது.
அது மட்டுமில்லாமல் பல படங்களிலும் சந்தோஷ் நாராயணன் இசை வெகுவாக கவர்ந்தது. தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்.