கவர்ச்சி உடையில் அதகளம் பண்ணும் ப்ரியா பவானி ஷங்கர்..! – உருகும் ரசிகர்கள்..!

1001

பிரியா பவானி ஷங்கர்…

சினிமா உலகில் நடிகர் நடிகைகளாக வருவதற்கு முன்பாக வேறு ஏதோ ஒரு வேலையை பார்த்து வருவது வழக்கம் அப்படி சினிமா வாடையே இல்லாமல் எங்கேயோ ஒரு மூலையில் செய்தி வாசிப்பாளராக தனது புதிய பயணத்தை தொடங்கினார் பிரியா பவானி ஷங்கர் அதன்பின்பு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனை ஏற்று சீரியலில் தந்து சிறந்த பங்களிப்பை கொடுத்திரந்த இவருக்கு திடீரென மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அவருக்கே ஆச்சரியத்தை கொடுத்தாலும் அதனை ஏற்று அந்த திரைப்படத்தில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்ததன் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை அழகாக கொள்ளையடித்தார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பிரியா பவானி சங்கர், முதன்முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறாராம். சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது, அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

என்னதான் கை நிறைய படங்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் என பிரியா நடித்து வந்தாலும் இதுவரை ஒரு துளி கவர்ச்சி கூட காட்டாமல் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுஇருந்தார். ஆனால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார்.