வலிமை படத்தின் ஆக்ஷன் காட்சிகள் எங்கு படமாக உள்ளனர் தெரியுமா? வெளியான வலிமை படத்தின் புதிய அப்டேட்.!

549

வலிமை…

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வெற்றியடைந்துள்ளது.

அதனை தொடர்ந்து தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார், இறுதிக்கட்ட காட்சிகளுடன் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் படக்குழுவினர் இப்படத்தின் மீதம் உள்ள ஆக்ஷன் காட்சிகளுக்காக ஸ்பெயின் நாடு செல்ல உள்ளனர். மேலும் அந்த ஆக்ஷன் காட்சிகளை அங்கு தான் படம்பிடிக்க வேண்டும் என வினோத் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரும் மே 1 ஆம் தேதி தல அஜித்தின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் முதல் பார்வை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.