விஜய் சேதுபதி…
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதும், இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை, முதியவர் தோற்றங்களில் நடிப்பதுமே அவரை பெரிய நடிகராக்கி உள்ளது. பிறமொழி படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மணிகண்டன், விஜய் சேதுபதி
இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமான, இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.