39 வயது நடிகை…
ஒரு காலத்தில் இந்த நடிகையை கண்டு ஏங்கிக் போகாத இயக்குனர்களும் கிடையாது நடிகர்களும் கிடையாது. ஆனால் தற்போது ஒரு ஈ காக்கா கூட தன் வீட்டு பக்கம் வருவதில்லை என வருத்தத்தில் உள்ளார் 39 வயது நடிகை.
ஒரு காலத்தில் தெலுங்கு சினிமாவை தன் கைப்பிடியில் வைத்திருந்தவர் அந்த ஆறடி ஆப்பிள். அந்த நடிகையின் உடற்கட்டை பார்த்து கிறங்கிப் போகாத ரசிகர்களே கிடையாது. அப்படி ஒரு பேரழகி.
அதுமட்டுமில்லாமல் சோலோ ஹீரோயினாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அந்த மாதிரி ஒரு படத்திற்காக உடல் எடையைக் கூட்டியதுதான் அவரது வாழ்க்கையில் அவர் செய்த மிகப் பெரிய தவறு.
அதன்பிறகு அவருடைய உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருகிறார். ஒரு மிகப்பெரிய பிரமாண்ட படத்தில் கூட அவரது உடலை ஒல்லியாக காட்டுவதற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் செய்ய வேண்டியதாகிவிட்டது.
அதன்பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். ஒரு காலத்தில் அந்த நடிகையின் வீடே கதியெனக் கிடந்த தயாரிப்பாளர்கள் கூட தற்போது அந்த நடிகையை சீண்டுவது இல்லையாம்.
இதனால் அந்த நடிகையோ, ஒரு காலத்தில் நானே கதியெனக் கிடந்த தயாரிப்பாளர்கள் இப்போது இந்த பக்கமே வருவதில்லை என வருத்தப்படுகிறாராம். என்னால் இப்போதும் கவர்ச்சி காட்ட முடியும், சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியும் என்று கூறியும் கண்டு கொள்வதில்லை என்பதே அந்த நடிகை கவலையாக உள்ளது.