பிரியா பவானி சங்கர்…
மேயாத மான் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரபல நடிகரை கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார்.
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நடிகர் சதீஷ் கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். தற்போது சதீஷின் புகைப்படத்தை வைத்து பிரியா பவானி சங்கர் கிண்டல் செய்து இருக்கிறார்.
சன்னிலியோனுடன் சதீஷ் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என்று கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார்.
என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு☺️ இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு ☺️ @actorsathish pic.twitter.com/ylqJ4xgbb0
— Priya BhavaniShankar (@priya_Bshankar) April 22, 2021