வலிமை…
தல அஜித் குமார் தற்போது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தனக்கு பிடித்த பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.
மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் முதல் பார்வை மே 1 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பர்ஸ்ட் லுக் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம், மிடுக்கான போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித் இதில் நடிக்கின்றார். படத்தில் அம்மா, அண்ணன், தங்கை, மகன் என செண்டிமெண்ட் விஷயங்கள் அதிகமாம்.
விஸ்வாசம் படத்தை மிஞ்சிகிற அளவு மனதை உருகும் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் வலிமை படத்தில் உள்ளதாம்.