ரம்ஜான் அன்று மாநாடு முதல் பாடல் வெளியீடு..!

563

மாநாடு…

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி என பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்டு மாதத்தில் மாநாடு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் முதல் பாடலை ரம்ஜான் அன்று வெளியிடயிருப்பதாக அறிவித்துள்ளனர்.