ஓடிடியில் வெளியாகும் அருண் விஜய் படம்!

432

அருண் விஜய் படம்…

அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கு முன்பே 2012ல் அருண் விஜய் நாயகனாக நடித்த படம் வா டீல்.

அவருடன் கார்த்திகா நாயர், வம்சி கிருஷ்ணா என பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை சிவஞானம் இயக்கியிருந்தார். 2014ல் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

கடந்த 7 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இப்படத்தை தற்போது தூசி தட்டியிருக்கிறது பெதர் டச் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து வா டீல் படத்தை தயாரித்த ஜே.எஸ்.கே. பட நிறுவனம்.

அதோடு, லாக்டவுன் நேரத்தில் தியேட்டரில் வெளியிட்டு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதற்காக, ஓடிடி தளத்திலேயே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.