கிங்காங் ஸ்டைலில் வெளியான கபி ட்ரைலர்.. மீண்டும் பேராசையில் தேனாண்டாள் பிலிம்ஸ்!!

544

கபி ட்ரைலர்…

தளபதி விஜய்யை வைத்து மெர்சல் படத்தை எடுத்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதன்பிறகு மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இது யாருக்கு சந்தோசமாக இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு குஷியாக இருக்கும்.

அதற்கு காரணம் மெர்சல் படத்தால் தான் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பட தயாரிப்பை நிறுத்தி விட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியான நிலையில் தற்போது மீண்டும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு அனிமேஷன் படத்தை எடுக்க உள்ளது தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடப்போவதாக குறிப்பிட்டிருந்தனர்.

ஹாலிவுட்டில் மனிதக் குரங்கை வைத்து கிங்காங் போன்ற பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் முதன் முதலில் இந்தியாவில் அதுவும் தமிழில் கபி என்ற படத்தை மனிதக் குரங்கை வைத்து உருவாக்கியுள்ளனர்.

முழுக்க முழுக்க அனிமேஷன் தரத்தில் உருவாக உள்ள கபி திரைப்படத்தின் முதல் பார்வை வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆனால் இதில் கிராபிக்ஸ் கொஞ்சம் சொதப்பலாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருந்தாலும் இந்திய சினிமாவில் முதல் முயற்சி எடுக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்ட தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் பெரிய பட்ஜெட்டை கையில் எடுப்பது சரி இல்லை என்ற கருத்துக்களே அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன.