கல்யாணம் ஆகியும் Glamour குறையாத மனிஷா யாதவ் புகைப்படங்கள்..!

483

மனிஷா யாதவ்…

அடிப்படையில் மாடலிங் பெண்ணான மனிஷா யாதவ் 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது கதாபாத்திரம் சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்தது.

அதனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதனால் கவனிக்கப்படும் நாயகியான மனிஷா யாதவ் தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தமானார்.

அப்படி ஒப்பந்தமான ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பணும் பாண்டியா போன்ற படங்கள் மோசமான தோல்வியை தழுவியதால் தன்னுடைய பாதையை கிளாமர் பக்கம் திரும்பினார்.

கிளாமர் பக்கம் சென்றவருக்கு த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற முதல் படமே தாறுமாறு வெற்றியை பெற்றது. இருந்தாலும் அதில் மனிஷா யாதவுக்கு படுகேவலமான கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டதால் படம் வெற்றியடைந்தாலும் இவரது கதாபாத்திரம் வரவேற்பை பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து வெளியான ஒரு குப்பை கதை படத்திலும் இவருக்கு ரசிகர்கள் வெறுக்கும் கதாபாத்திரமாகவே அமைந்தது. இதனால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன மனிஷா யாதவ் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

பட வாய்ப்புகளை பெற முதற்கட்டமாக தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அள்ளி வீசி வருகிறார். அதிலும் இந்த முறையை அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் எல்லாம் கவர்ச்சியின் உச்சகட்டம் தான்.