பூஜா ஹெக்டே…
நெல்சன் திலீப்புகுமார் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடித்து வரும் படம் தளபதி 65.
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன்பின் பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.
அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்து, இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாகியுள்ளார்.
தற்போது தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தில் கதாநாயகியாக நடித்து நடித்து வரும் பூஜா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அவரே அறிவித்துள்ளார்.
அந்த பதிவில் ” நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன், என்ன சமீபத்தில் சந்தித்த அனைவரும் டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள், அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் ” என தெரிவித்துள்ளார்.
🙏🏻😷 pic.twitter.com/fwdd9Cq1Go
— Pooja Hegde (@hegdepooja) April 25, 2021