சிவகார்த்திகேயனை தொடர்ந்து வேறொரு முன்னணி நடிகருக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – யார் தெரியுமா?

479

ஐஸ்வர்யா ராஜேஷ்…

காக்க முட்டை படத்தின் மூலம் சிறந்த நடிகைகளில் ஒருவராக ரசிகர்களால் பாராட்டப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதன்பின் தொடர்ந்து தனுஷின் வடசென்னை, கனா, க. பெ. ரணசிங்கம் எனும் சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

கதாநாயகியாக மட்டுமல்லாமல், முன்னணி நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் மீண்டும் மற்றொரு முன்னணி நட்சத்திரத்திற்கு தங்கையாக நடிக்கவுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஆம் தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக புஷ்பா எனும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.