ரஜிஷா விஜயன்…
மலையத்தில் வெளியான அனுராக கரிக்கின் வெள்ளம் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி சிறந்த நடிகை என்று விருதையும் வென்றவர் நடிகை ரஜிஷா விஜயன்.
இவர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தில் கதாநாயகி நடித்து தமிழ் மக்கள் மனதில் நடிகையாக இடம்பிடித்துள்ளார்.
மேலும் கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வேறொரு முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ரஜிஷா விஜயனுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். பி.எஸ்.
மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தில் தான் ரஜிஷா விஜயனை கதாநாயகி நடிக்க கேட்டுள்ளார்கள் என தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் வெளியான இப்படத்தின் First லுக் போஸ்டர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.