மிலிந்த் சோமன்
அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தது குறித்த தொடர் சர்ச்சைக்கு, நடிகர் மிலிந்த் சோமன் விளக்கம் அளித்துள்ளார். தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களில் நடித்தவர் மிலிந்த் சோமன்(53).
பிரபல நடிகரும்-மொடலுமான இவர், தனது மனைவியும், பிரெஞ்ச் நடிகையுமான Mylene Jampanoi-வை கடந்த 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின்னர் கடந்த ஆண்டு, விமான பணிப்பெண்ணான அங்கிதா கொன்வரை(26) காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு இடையிலான வயது வித்தியாசம் 27 என்பதால், சமூக வலைதளங்களில் இவர்களது திருமணம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
அதிலிருந்து தொடர் சர்ச்சைக்கு மிலிந்த் ஆளானார். இந்நிலையில், தன்னுடைய திருமணம் குறித்த தொடர் சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்.
மிலிந்த் சோமன் தனது காதல் திருமணம் குறித்து கூறுகையில், ‘பொதுவாக சமூகம் காதலிப்பவர்களுக்கு சாதி, மதம், பாலினம், நாடு என பல காரணங்களை கூறி தடைகளை உருவாக்கும்.
ஒருவர் தங்களுக்கு பொருத்தமான ஒரு உறவை தேர்வு செய்வதற்கு அவரவருக்கு உரிமையும், சுதந்திரமும் உண்டு. அது அவரவர் உள்ளங்களில் ஏற்படும் உணர்வுகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.
இதில் சமூகம் தங்களது கருத்துக்களை கூறுவது சரியல்ல. இருவரும் பரஸ்பரம் புரிந்துகொண்டு அன்பை பரிமாறிக்கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது தான் அவசியமானது’ என தெரிவித்துள்ளார்.