“பேர மாத்துங்க!”.. “Page-அ விட்டு வெளியேறிடுவேன்!” – கொதித்த Fans.. யுவனின் Cool பதில்கள்!

436

யுவன் ஷங்கர் ராஜா…

இசையமைப்பாளர் யுவனின் இசைக்கு தமிழில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில், அண்மையில் இஸ்லாமிய மார்க்கத்தை தொடரும் யுவன் ஷங்கர் ராஜா தமது ட்விட்டரில் இஸ்லாமிய குறிப்பு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதற்கு ரசிகர்கள் சிலர் அவரை நோக்கி பல கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதற்கு யுவனின் பதில்கள் வைரலாகி வருகின்றன. அதில் “யுவன் சங்கர் ராஜா அவர்களே நான் உங்கள் இசைக்கு ரசிகன். நீங்கள் ஏன் இப்படி பகவத் கீதை, பைபிள் என மற்ற மதங்களில் உள்ளவற்றை மதிக்காமல் சர்ச்சையை கிளப்பும் வகையிலான பதிவை பதிவிடுகிறீர்கள்?” என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு பதில் கூறிய யுவன் சங்கர் ராஜா,

“நான் எனக்கு பிடித்த ஒரு குறிப்பினை ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தில் இருந்து எடுத்து என்னுடைய சமூக பக்கத்தில் போஸ்ட் செய்து இருக்கிறேன். அப்படியானால் அது எப்படி மற்ற மார்க்கங்களை மதிக்கவில்லை என்று அர்த்தமாகி விடும். இதில் என்ன சர்ச்சை இருக்கிறது? பிரபலங்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் நம்பிக்கைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் உண்டு.” என்று பதில் கூறியுள்ளார்.

இன்னொருவர், “நான் உங்கள் இசைக்கு மட்டுமே ரசிகர், இப்படி நீங்கள் பின்பற்றும் மார்க்கத்தை இங்கு பிரச்சாரம் செய்தால் நான் உங்கள் பக்கத்தில் இருந்து வெளியேறிவிடுவேன்” என கூற, அதற்கு யுவன், “வெளியேறுங்கள்” என பதில் அளித்துள்ளார்.

இன்னொரு ரசிகர் ஒருவர் , “யுவன் உங்களுடைய பெயரை மாற்றுங்கள். நீங்கள் வேறு ஒரு நம்பிக்கை மார்க்கத்துக்கு மாறிய பிறகும் அந்த நம்பிக்கைக்கு எந்த பாகுபாடும் காட்டாமல் இருப்பதற்காகவேயேணும் உங்கள் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும்!” என்று கூறியதற்கு பதிலளித்த யுவன்,

“உங்களுக்கு விளக்குகிறேன்.. நான் ஒரு இந்தியர்.. நான் ஒரு தமிழர்… நான் ஒரு இஸ்லாமியர்.. இங்கு இஸ்லாமியர்கள் என்பது அரேபியாவில் மட்டும் இருப்பதாக கருதுகிறீர்கள். அப்படி அல்ல. அதனால்தான் இந்த மனநிலை உங்களுக்கு இருக்கிறது. நம்பிக்கையும் இனக்குழுவும் வெவ்வேறானவை. மொழியும் இறக்குழுவும் வெவ்வேறானவை.

தேசியமும் மதமார்க்கமும் வெவ்வேறானவை. இந்த அடிப்படை லாஜிக் உங்களுக்கு புரியவில்லை என்றால், உங்களுக்கு எதுவுமே புரியாது! உங்களுக்கு நேரம் எடுத்து விளக்கி இருக்கிறேன். ஏனென்றால் நீங்கள் இந்த மனநிலையை வேரறுக்க வேண்டும். இத்துடன் வெறுப்பை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோன்று ரசிகர் ஒருவர், “கொரோனாவுக்கு உங்களுடைய பங்களிப்பு என்ன?” என்று காட்டமாக கேட்டதற்கு, “நான் ஏதோ சிறிதளவில் மக்கள் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இசை அமைத்திருக்கிறேன். இந்த உலக அமைதிக்காக நீங்கள் ஆற்றியிருக்கும் பங்கு தான் என்ன?” என்று கேட்டிருக்கிறார். யுவனின் இந்த பதில்களும் ரசிகர்களின் கேள்விகளும் வைரலாகி வருகின்றன.