விஜய் சேதுபதி…
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை படத்தில், விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
ஆரம்பத்தில் ‘விடுதலை’ படத்தை தமிழில் மட்டுமே வெளியிட திட்டமிட்டிருந்த தயாரிப்பாளர், விஜய் சேதுபதியின் வருகையாலும், அவருக்கு தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகில் இருக்கும் மார்க்கெட் காரணமாக பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.
அதன்படி தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.