சிப்பு சூர்யன்…
சன் டிவியின் TRPயில் உச்சத்தில் இருக்கும் ஒரே சீரியல் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள ரோஜா சீரியல்.
தொடர்ந்து பல வாரங்களாக TRP ரேட்டிங்கில் அனைத்து தொலைக்காட்சிகளின் சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது ரோஜா.
இந்த சீரியல் மூலம் தற்போது சின்னத்திரையில் பல ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்திருப்பவர் ரோஜா சீரியல் கதாநாயகன் நடிகர் சிப்பு சூர்யன்.
இந்நிலையில் சிப்பு சூர்யன் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் சமூக வலைத்தளத்தில் உலவருகிறது. இதில் சிப்பு சூர்யனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், கூடிய விரைவில் அவர் மீண்டுவருவார் என்று நபர் ஒருவர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அதிர்ச்சியில் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.