நிதி அகர்வால்…
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிறமொழி நடிகைகள் அதிகம் தமிழ் படங்களில் நடித்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நிதி அகர்வால்.
இதற்கு முன்னர் இவர் தெலுங்கில் பல படங்கள் நடித்து தெலுங்கு ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். தமிழில் ஈஸ்வரன் படம் மட்டுமே வெளியானாலும் இவரை சில நாட்களாக ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவியுடன் பூமி திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் இப்படம் திரையரங்கில் வெளியாகாமல் OTT தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாமல் சுமாரான வெற்றியை பதிவு செய்தாலும் தமிழ் ரசிகர்கள் நிதி அகர்வால் கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம் இவருடைய அழகிய முகமும் அழகான தோற்றமும் தான்.
தற்போது இவர் பிங்க் உடையில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா உடனே நிதி அகர்வால் பிங்க் குயின் என சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் அவர் வைலட் உடைதான் அணிந்துள்ளார் என்பது ரசிகர்கள் கவனிக்காமல் உள்ளனர். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.