வனிதாவை ஏமாற்றிய பிக்பாஸ்!!

1092

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை வனிதா. அதில் அதிகாரத் தன்மையாலும், மற்றவர்கள் அடக்கி ஆள்வது போல பேசியதால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார்.

முன்பே வெளியேற்றப்பட்டாலும் மீண்டும் ஒய்ல்டு கார்டு சுற்று மூலம் போட்டியாளராகும் வாய்ப்பை மீண்டும் பெற்றார். பிக்பாஸ் விட்டில் கடந்த வாரம் குடும்ப சுற்றில் போட்டியாளர்களை காண அவரின் குடும்பத்தார்கள் வந்தார்கள். இதில் வனிதாவின் இரண்டு மகள்கள் வந்தார்கள்.

இந்நிலையில் நேற்று கமல் ஹாசன் வனிதாவை அன்னை வனிதா அவர்கள் என கூறி பெருமைப்படுத்தியதோடு வனிதா மீது இருந்த முந்தய இமேஜ் மாறிவிட்டது. எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது. மாற்றம் வந்துவிட்டது என கூறி பாராட்டி பேசினார்.

அப்போது வனிதாவிடம் எதிர்பார்ப்பு குறித்து கேட்ட போது அவர் மனக் குமுறலோடு குழந்தைகள் மீதிருந்த பாசத்தால் மற்றவர்களை பகைத்துவிட்டேன். தன் மகன் வருவான். பிக்பாஸ் அழைத்துக்கொண்டு வருவார் என எதிர்பார்த்தேன்.

பரவாயில்லை, அவனுக்கு ஏதோ என் மீது கோபம் இருக்கிறது. அவன் என்னை புரிந்துகொண்டு திரும்பி வருவான் என நம்புகிறேன் என கூறினார்.