பிக்பாஸ் சாண்டி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க ஃப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்களின் குடும்பத்தார் பலர் வந்திருந்தார்கள். அழுகை, கோபம், சந்தோசம் எல்லாம் நிரம்பி வழிந்தது.
இதில் சாண்டியை காண அவரின் மனைவி சில்வியா மற்றும் குழந்தை லாலாவும் வந்திருந்தார்கள். சாண்டி மகளை பார்த்து கண்கலங்கி அழுதார். குழந்தையுடன் அனைவரும் கொஞ்சி விளையாடினார்கள்.
இந்நிலையில் சாண்டியில் எதிர்பார்ப்பு என நேற்று கமல் கேட்டபோது என் மச்சினிச்சியும் நானும் நடனமாடுவோம், மாமியாரும் வருவார்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் அவர்கள் வரவில்லை என கூறினார்.
இந்நிலையில் சாண்டி மாமியார் வெளியே இருந்து இதுவரை சாண்டியை நான் மருமகனாக பார்க்கவில்லை. என் அப்பா, அம்மாவை போல தான் பார்த்தேன். மாப்பிள்ளை என கூப்பிட்டதில்லை.
இப்போது முதல் முறையாக சொல்கிறேன் ஜெயித்துவிட்டு வாங்க மாப்பிள்ளை என கூறி வாழ்த்தியுள்ளார்.