மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா – பின்னணி என்ன ?

651

பிரியங்கா…

‘Comedy is a serious Business’ என்று சொல்லுவாங்க. அந்த காமெடியினால் மற்றவர்களை கிண்டல் செய்து சிரிக்க வைக்கலாம்; கிண்டல் வாங்கியும் சிரிக்க வைக்கலாம்.

இந்த இரண்டாவது Category – க்கு பொருத்தமானவர் Anchor பிரியங்கா. எவ்வளவு கிண்டல் கேலி செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல்.

நடிப்பதற்கு, சின்னச் சின்ன வாய்ப்புகள் கூட வந்திருக்கு. ஆனால், அவருக்கு ஆர்வம் இல்லை. சில பேர் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போகலாம்னு நினைச்சு வருவாங்க; போயிருக்காங்க. ஆனால், இவருக்கு அந்த ஆசை இல்லை. அது ஏன்னு நமக்கு தெரியலை.

இவருடைய வாழ்வில் மறக்க முடியாத சோகம் என்னவென்றால், இவர் 7-ம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்துள்ளார். இதனால், அப்போதே பொறுப்பானவராக மாறியிருக்கிறார். தொலைக்காட்சி துறைக்கு வராமல் இருந்திருந்தால், நிச்சயம் விமான பணிப்பெண் ஆகியிருப்பாராம்.

பிரியங்கா ஒரு சாப்பாடு பிரியர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இப்படி ஒரு நிலையில் பிரியங்கா, தனது யூடுயூப் சேனலில் தனக்கு புட் பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.