சிவாங்கி..
சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் மற்றும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பிரபலம் ஆகி விடுகிறது ஏனென்றால் அவ்வளவு அருமையாக இந்த நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் நடந்து முடிந்த நிகழ்ச்சிதான் குக்வித் கோமாளி சிசன்2 இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்கள் ஆனால் இதில் கனி என்பவர் டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் இதில் சிவாங்கி மற்றும் அஸ்வினை பாராட்டாத ரசிகர்களே இல்லை என்ற அளவிற்கு அவ்வளவு அருமையாக இவர்கள் 2 பேரும் அந்த நிகழ்ச்சியில் போட்டி போட்டு பேசும்போது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விடும் என்றுதான் கூறவேண்டும்.
சிவாங்கி இந்த நிகழ்ச்சிக்கு பின்பு பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது இந்நிலையில் சமீபத்தில் சிவாங்கி ஒரு பேட்டி ஒன்றில் அஸ்வினை பற்றி கூறியுள்ளாராம்.
ஆம் அதில் அஸ்வினை முதன் முதலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்க்கும் பொழுது இவ்வளவு அழகான ஆண் எதற்கு சமைக்க வருகிறார் என குழம்பினாராம் அதன்பின்பு அஸ்வின் ஒரு திறமையானவர் என சிவாங்கி கூறியதாக தற்போது இந்த தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.