சமீபகாலமாகவே நடிகைகள் சிலர் பாலியல் புகார்களை Me Too ல் கூறி வந்தனர். இதில் சில நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சிக்கினர். தற்போது மராத்தி சினிமாவை சேர்ந்த ரோஹினி, ஷாரா சரவான் ஆகிய இருவர் பிரபல நடிகர் சுபாஷ் யாதவை பாலியல் சர்ச்சையில் சிக்கவைத்துள்ளனர்.
நடிகைகள் இருவரும் சுபாஷை தொடர்பு கொண்டு தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூகவலைதளத்தில் வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமானால் இருவருக்கும் ரூ 15 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதற்காக 2 போலிஸ் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பயந்து போன சுபாஷ் ரூ 1 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் தொடர்ந்து நடிகைகள் இருவரும் பணம் கேட்டு மிரட்டியதால் அவர் போலிசில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளார்.
இதனால் சம்மந்தப்பட்ட நடிகைகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குற்றத்தில் ஈடுப்பட்ட 2 போலிசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.