கண் கவரும் கவர்ச்சி உடையில் வலிமை பட நடிகை !!

538

ஹியூமா குரேஷி…

கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி ஹியூமா குரேஷி.

இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார். விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார், ஹியூமா குரேஷி. அஜீத்துடன் பில்லா 2 படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

அதன்பின் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது.

தற்போது ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹியூமா குரேஷி ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து பாலோ செய்து வருகின்றனர்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஹியூமா குரேஷி, தற்போது ஆரஞ்சு கலர் ஆடையில் போஸ் கொடுத்துள்ளார்.