வனிதா…
வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் கடந்த வருடம் நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள். அதன் பிறகும் Terms ஒத்துவராமல் 3 மாதங்களில் வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டார்கள்.
ஆனாலும் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருக்கும் வனிதா விஜயகுமார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி, யூடியூப் சேனல் நடத்தும் வனிதா தர்பார் நிகழ்ச்சியிலும், மட்டம் போடாமல் கலந்து கொண்டு வருகிறார்.
பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் வைத்து பாம்பு சட்டை படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனர் அவதாரம் எடுத்த ஆதம் தாசன், தற்போது ஹீரோயினை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கிறார். அதற்கு அனல் காற்று என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் வனிதா தான் ஹீரோயினாம்.
இந்தநிலையில், சமீபத்தில் வெளியான Big Boss ஜோடிகள் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் போட்டியாளர்களும் குக் வித் கோமாளி போட்டியாளர்களும் சேர்ந்து ஜோடிகளாக பங்கேற்பது போல் இருந்தது.
இதில் வனிதா அவர்கள் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் பச்சை கலர் லிப்ஸ்டிக் போட்டு இவர் ஆட்டம் போல சில போட்டோசை இவர் வெளியிட, நெட்டிசன்கள் “என்ன கண்றாவி இது…குமட்டுது” என்று செம்மையாக கலாய்த்து வருகிறார்கள்.