பிக் பாஸ் புகழ் ரம்யா
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபற்றி மக்களுக்கு பரீட்சியமான பாடகி ரம்யா பிரபல டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. திருமண நிகழ்வில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, ரம்யா தனது திருமண அறிவிப்பை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ரம்யாவின் இந்த திடீர் திருமணத்தால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், ரம்யா திருமணம் செய்துகொண்டுள்ள நடிகர் சத்யா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் இலங்கை தர்ஷனின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் அல்லாமல் அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களையும் சமூகவலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.