பிக்பாஸ் வீட்டிலிருந்து அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட வனிதா : பிக் பாஸின் மிகப்பெரிய பிளான்!!

1003

பிக் பாஸின் மிகப்பெரிய பிளான்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதாவை வெளியேற்றியதன் பின்னணியில் பிக் பாஸின் மிகப்பெரிய பிளான் உள்ளது. பிக் பாஸ் வீடா இல்லை வனிதா வீடா என மக்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தவர் வனிதா.

ஆனால் மூன்றாம் வாரமே அவர் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் மீண்டும் அவரை வைல்ட் கார்ட் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டார்.

எதிர்பார்த்தபடியே கண்டெண்டுகளை வாரிக் கொடுத்த வனிதா, நேற்று மீண்டும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை யார் எது பேசினாலும், அதை வைத்து குட்டி கலாட்டாக்கள் பண்ணுவதில் வல்லவராக இருந்தார் வனிதா.

இதனால் அவர் வெளியேற்றப்பட்டதும் இனி கண்டெண்ட்டுகள் கிடைக்காதோ என்ற தவிப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வனிதாவின் வெளியேற்றத்திற்கு பின்னணியிலும் சரி, இனி வரும் எபிசோட்களுக்கான பிளானிலும் சரி, பிக் பாஸ் வேறொரு திட்டம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னமும், வீட்டுக்குள் சண்டை சச்சரவுகளை வைத்து மட்டும் ஓட்ட முடியாது. ஏற்கனவே இது பிக் பாஸா இல்லை சீரியலா எனக் கேட்கும் அளவிற்கு அழுகாச்சி காவியமாக நிகழ்ச்சி நகர்ந்து வருகிறது.

காதல், நட்பு, குடும்ப செண்டிமெண்ட் என போர் அடிப்பதாக நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். எனவே, போட்டியாளர்களை ஆக்சனில் இறக்க வேண்டிய கட்டாயம் பிக் பாஸிற்கு வந்துவிட்டது.

இனியும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால், அவர் மூலம் ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே தான் இருக்கும். எனவே தான் அவரை வெளியில் அனுப்பி விட்டார்கள் என்கிறார்கள்.

பிரச்சினை செய்யாமல் உள்ளே இருந்தால் அவரது கெத்தே போய் விடும் என்பதால் வனிதாவும் இந்த காண்ட்ராக்ட்டிற்கு ஓகே சொல்லி விட்டார் போல.