கவின் – லொஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியா காதலித்து வருகின்றனர். ஆனால் லாஸ்லியாவின் பெற்றோர் வீட்டுக்குள் வந்தபோது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் லாஸ்லியா இனி கேமில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என முடிவெடுத்தார்.
இந்நிலையில் கமலிடம் லாஸ்லியா சொன்ன ஒரு விஷயம் பற்றி கவின் நேற்று கோபத்துடன் பேசினார். “நேத்து நீயும் அதைத்தானே சொன்ன. கமல் சார் கிட்ட பேசும்போது. பிக்பாஸ் வந்ததில் இருந்து சில பழக்கங்கள் ஏற்பட்டது. அது உண்மையா பொய்யா தெரியல இன்னும் அப்டினு” என கவின் கேட்டார்.
அதற்கு லாஸ்லியா “நான் உன்னைப்பற்றி சொல்லவில்லை. சேரன் பற்றி இதற்குமுன் கூறியதை தான் மீண்டும் கூறினேன். உண்மையை பொய்யா என்கிற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே இருப்பது பற்றித்தான் பேசினேன்” என பதில் அளித்தார்.