செம்பருத்தி சீரியல் பார்வதியை காதலிக்கும் விஜய் டிவி நடிகர்.. சந்தில் சிந்து பாடுவது இதுதானோ!

449

சபானா…

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சி அனைவரிடமும் பிரபலமாக இருப்பதற்கு காரணம் அதில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலை பட்டி டிங்கரிங் செய்து உருவாக்கினர்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல டிஆர்பியை பெற்றுக்கொடுத்து நெடுங்காலமாக நம்பர் ஒன்றாக வலம் வருகிறது. இதில் விஜய் டிவி ஆபீஸ் சீரியல் நடிகர் கார்த்தி ஆதி என்ற ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்தார்.

சபானா என்ற நடிகை பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் முன்னாள் நடிகர் ரஞ்சித் மனைவி நடிகை பிரியாராமன் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது கார்த்திக்கு பதிலாக யூடியூப் சேனல் தொகுப்பாளர் ஒருவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

எப்போதுமே சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்குள் காதல் வருவது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் செம்பருத்தி சீரியல் நாயகி சபானாவுக்கும் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

விஜய் டிவியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஓன்று. இந்த சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆரியன். இவரைத்தான் ஷபானா காதலித்து வருகிறாராம்.

இவர்களுக்குள் நடந்த இன்ஸ்டாகிராம் உரையாடல் அவர்களது காதலை உலகிற்கு தெரியப்படுத்த விட்டதாக சமூக வலைதளங்களில் சீரியல் ரசிகர்கள் பரபரப்பாக இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.