மீண்டும் வந்த ரைசாவின் பழைய அழகு – மருத்துவரிடம் பொய் வழக்குக்கு மன்னிப்பு கேட்பாரா ரைசா !

445

ரைசா…

நாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தவரை அழகுக்கு அதிகம் கவனம் செலுத்துவார் ரைசா. அழகு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட ரைசா வில்சன், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி,

முகப்பொலிவுக்கான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதன் பிறகு மருத்துவரை கேட்ட போது அவர் வெளியூர் சென்று விட்டதாக அலட்சியமாக சொன்னார் என தனது வீங்கிய முகத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை ரைசா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். ஆனால் மருத்துவர் தரப்போ dermal fillers சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்துக்கு முகம் வீக்கமாக தான் இருக்கும்.

இதைப்பற்றி சூசகமாக தெரிந்துகொண்டு ரைசா வேண்டும் என்றே பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று டாக்டர் பைரவி நடிகை ரைசா மீது குற்றச்சாட்டை வைத்தார்.

இப்போது டாக்டர் பைரவி சொன்னபடி ரைசா முகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வந்துவிட்டது. இது சமீபத்தில் பதிவு செய்த அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தினால் தெரியவருகிறது.

அவர் சொன்னபடியே அவரது முகம் தற்போது ரைசா வில்சன் மன்னிப்பு கேட்பாரா? என்று தெரியவில்லை.