நான் சினிமாவை விட்டு போனால் அதற்கு காரணம் அவராகத்தான் இருக்கும்.. ஓப்பனாக சொன்ன காஜல் அகர்வால்!!

499

காஜல் அகர்வால்…

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் கைவசம் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் துரதிஸ்டவசமாக எந்த படமும் வெளியாக முடியாத சூழ்நிலையில் உள்ளது.

எப்போதுமே ஹிந்தி நடிகைகளுக்கு வாழ்க்கை தருவது என்னமோ தென்னிந்திய சினிமா தான். அப்படி ராஜமௌலி இயக்கிய மகதீரா என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் காஜல் அகர்வால்.

அதன் பிறகு எல்லாமே ஏறுமுகம்தான். அதுவும் தமிழில் துப்பாக்கி படத்திற்கு பிறகு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். மேலும் தென்னிந்திய சினிமாவில் பல நடிகைகள் வந்தாலும் தன்னுடைய இடத்தை நிரந்தரமாக வைத்துக் கொண்டார்.

அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மூத்த நடிகர்களின் படங்களிலும் முதல் சாய்ஸ் இவர்தான். இப்படி கல்யாணத்திற்கு பிறகு சினிமா மார்க்கெட் அதிகம் உள்ள நடிகைகளில் குறிப்பிடவேண்டிய ஒருவராக மாறி உள்ளார்.

இப்படிப்பட்ட காஜல் அகர்வால் ஒருவேளை நான் சினிமாவை விட்டு விலக நேர்ந்தால் அதற்கு காரணம் தன்னுடைய கணவராக தான் இருப்பார் என கூறியுள்ளார். தவறாக இல்லை.

திருமணத்திற்கு பிறகும் கணவர் தன்னுடைய சினிமா கேரியருக்கு சப்போர்ட் செய்வதால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன் எனவும், அவர் எப்போது சினிமாவை விட்டு வா என்று சொன்னாலும் கிளம்பி விடுவேன் என கூறியுள்ளார். இது தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் டர்ரு கிளப்பியுள்ளது.