பழைய குருடி கதவை திறடி என மீண்டும் விஜய் டிவியிடம் தஞ்சமடைந்த நடிகர்.. மீண்டும் அந்த நிகழ்ச்சியில் அவரே!

639

மீண்டும் விஜய் டிவியில்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் முக்கியமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அது என்னமோ தெரியவில்லை சினிமாக்காரர்களுக்கும் விஜய் டிவிக்கும் அப்படி ஒரு பொருத்தம். விஜய் டிவி ஒரு கோரிக்கை வைத்தால் அதை எந்த நடிகர்களும் ஏற்க மறுப்பதில்லை.

இவ்வளவு ஏன் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பல நடிகர்கள் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர். சூர்யாவும் தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தபோது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதேபோல் முன்னணி மூத்த நடிகராக வலம் வரும் கமலஹாசனும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 4 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஐந்தாவது சீசன் தொகுப்பாளர் மாற அதிக வாய்ப்பு இருப்பதாக ஆரம்பத்திலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் தற்போது மீண்டும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது. அதற்கு காரணம் அவர் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்ததுதான்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கமலஹாசன் சிலநூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பலருக்கும் சோகத்தை கொடுத்தது. இருந்தாலும் விட்டதை பிடித்து விட வேண்டும் என மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் அடுத்த கட்ட அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ளாராம்.