ஓவியாவிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல இயக்குனர்..!!

381

ஓவியா……..

சமீபகாலமாக மீடு பிரச்சனை சினிமாவில் மட்டுமல்லாமல் பள்ளிகளிலும் தொடர்கிறது. தொடர்ந்து பள்ளிகளில் மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறாக நடந்து கொள்வது குறித்து பல செய்திகளை தினமும் நாளிதழ்களில் படிக்கிறோம்.

களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஓவியா. அதன் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் வெற்றிப் படங்கள் எதுவும் அவருக்கு அமையவில்லை.

அதன் பிறகு அவ்வப்போது சினிமாவில் நடித்து வரும் ஓவியாவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இன்று வரை பிக் பாஸ் ராணி என்றால் அது ஓவியா தான் என கூறி வருகின்றனர்.

அந்த அளவுக்கு தன்னுடைய எதார்த்தமான வெளிப்படைத்தன்மையையால் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கினார். ஆனால் உருவாக்கிய அடுத்த சில மாதங்களிலேயே அதை 90ml என்ற படத்தில் மோசமாக நடித்த போது கெடுத்துக் கொண்டார்.

அதன்பிறகு ஏறெடுத்து பார்க்க ஆளில்லை. இருந்தாலும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் உள்ள மிகக் கௌரவமான பிஎஸ்பிபி என்ற பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஓவியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நேர்மையை உண்மையில் பாராட்டுகிறேன், வெளிப்படையாக பேசுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஓவியா சினிமாவுக்கு வந்த புதிதில் அவரிடம் ஒரு இயக்குனர் சில்மிஷம் பண்ணியதாக அப்போதே அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் பரபரப்பாக வெளியாகி பின் அடங்கியது குறிப்பிட வேண்டியது.

ஆனால் அவர் யார் என்பது தற்போது வரை தெரியவில்லை. அதிலும் ஓவியா அப்போது சினிமாவுக்கு வந்த புதிது என்பதால் அது குறித்துப் பேசினால் மார்க்கெட் போய்விடுமோ என்ற கவலையில் அதை மறைத்து விட்டதாகவும் கூறுகின்றனர்.