லாஸ்ட் நயிட் இன் சோஹோ…
இந்த 2021 ல் பலராலும் அதிக எதிர்பார்க்கப்பட்டு வரப்படும் படமெனில் அது “லாஸ்ட் நயிட் இன் சோஹோ” என்றால் அது மிகையாகாது. பேபி டிரைவர் என்ற ஹிட் படத்தை கொடுத்த எட்கர் ரைட் இயக்கியுள்ள சைக்கலாஜிக்கல் ஹாரர் திரில்லர் படம் இது.
மனிதர் முதல் முறையாக ஹாரர் என்ற ஜானரில் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் அன்னா டெய்லர் ஜாய் மற்றும் தாமஸின் மெக்கென்ஸி இருவரும் தான் முக்கிய கதாபாத்திரம்.
எட்கரின் படமெனில் காமெரா முன்னுக்கு பின் முரணாக புகுந்து விளையாடும் என்பது நாம் அறிந்ததே. சத்தம் அதிகமான இசை, கண்ணை கூசும் கலர் காம்பினேஷன் என இவருக்கென்று தனி ஸ்டைல் பிலிம் மேக்கிங் உள்ளது.
எவ்வாறு தனது ஸ்டைலில் பேய் படம் எடுப்பார் என்பதை பார்க்க வேண்டும் என்றே ஒரு வருடமாக காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களும் இங்கு உண்டு. கதைப்படி தனிமையில் வாடும் நம் நாயகி தூக்கத்தில் 6 வருடம் பின் நோக்கி செல்லும் படி அமைகிறது. அங்கு பாப் பாடகியை சந்திக்கிறார்.
அவர் கோணத்தில் அங்கு நடப்பதை பார்க்க முடிகிறது. ஆரம்பத்தில் நன்றாக இருப்பினும் இவரது நிஜ வாழ்க்கையை புரட்டி போட ஆரம்பிக்கிறது அந்த நிகழ்வு. இரவில் ஹீரோயின் மற்றவள் உலகிற்கு (1960) செல்ல, பகலில் அவள் ஹீரோயினின் உலகிக்கிற்கு (1966 ) வருகிறாள். இப்படிப்பட்ட கதையை தான் இயக்குனர் படமாக்கியுள்ளார்.
முதலில் 2020 செப்டம்பர் ரிலீஸ், பின்னர் கொரானா தொற்று காரணத்தால் ஏப்ரல் 23 என சொல்லப்பட்டு, தற்பொழுது படம் அக்டோபர் 22 ரிலீசாவதாக அறிவிப்புக்கு வந்துள்ளது.