சாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி : மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்!!

810

காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 ல் தற்போது போட்டியாளராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். அண்மையில் அவரை சந்திக்க வந்த அவரின் மனைவி சில்வியாவையும் மகள் லாலாவையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அவருக்கு முன்பே நடிகை காஜல் பசுபதியுடன் திருமணமாகி பரஸ்பர விவாகரத்து ஆனதை பலரும் அறிந்திருப்பார்கள். அண்மைகாலமாக காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரின் நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

ரசிகர்களோடும் டிவிட்டரில் பேசி வருகிறார். இந்நிலையில் அவரை, சாண்டிக்கும் உங்களுக்கு என்ன? குழந்தைகள் இருக்கிறதா? இது உண்மையா பொய்யா என பலரும் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்களாம்.

இதனால் காஜல் கடுப்பாகியுள்ளார். மேலும் அவர் இந்த கேள்விக்கு நான் அவரை திருமணம் செய்துகொண்டேன், விவாகரத்தும் பெற்றுவிட்டேன். குழந்தைகள் இருப்பதாக வரும் தகவல் பொய்யானது. அவர்கள் என்னுடை உறவுக்கார குழந்தைகள். எனக்கு குழந்தை இல்லை என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். நான் அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டேன். நான் எப்போதும் வருத்தப்படுவது இந்த ஒரு விசயத்தில் தான் என கூறியுள்ளார்.