அபிராமி
பிக் பாஸ் 3 பல சர்ச்சைகள் சண்டைகள் எல்லாம் தாண்டி இறுதி கட்ட போட்டியில் இருக்கிறது.
கடைசி வாரம் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் குடும்பத்தினர் வீட்டுக்குள் வந்து சென்றனர். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் லொஸ்லியா மற்றும் ஷெரின் இருக்கிறார்கள்.
லொஸ்லியாவும் ஷெரினும் அபிராமிக்கு தோழிகளாக இருந்த நிலையில் அபிராமி போட்டியில் இப்போது இல்லை.
ஆனால் அபிராமி பிக்பாஸ் ரசிகர்களிடம் ஓட்டு போடுவது உங்கள் விருப்பம் ஆனால் எனது தோழியும் தங்கையும் நாமினேஷனில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன் ஷெரின் கடைசி வரைக்கும் போட்டியை தொடர்வதற்கு தகுதியானவர் எனவே அவர்களுக்கு ஓட்டு போடுமாறு ரசிகர்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறார்.