பவித்ரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்த காரணம் இதுதான்.. கண்கலங்க வைக்கும் பதிவு!!

469

பவித்ரா லட்சுமி…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது அடுத்தடுத்து சில பட வாய்ப்புகளை பெற்று ஹீரோயினாக அறிமுகமாக உள்ளவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி.

இவர் கடந்த சில வருடங்களாகவே யூட்யூப் தளத்தில் வெளியாகும் பாடல்களில் நடனமாடியும் நடித்தும் வந்தார். அப்போது இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை பார்த்த விஜய் டிவி இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சேர்த்தது.

அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி தனக்கும் ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தற்போது ஹீரோவாக வலம் வரவுள்ளார். பவித்ரா லட்சுமியை பார்க்கும் போதே அவரது முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

ஆனால் அது எதற்காக என்ற காரணம் ரசிகர்களுக்கு தெரியாமலேயே இருந்தது. பெரும்பாலும் நடிகர் நடிகைகள் தங்களது முகத்தை வயதுக்கு ஏற்ப அழகாக வைத்துக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து முகத்தை மாற்றி விடுவார்கள் என்பது தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் பவித்ரா லட்சுமி அழகுக்காக செய்யவில்லையாம். திரைப்படங்களுக்காக ஏங்கி கொண்டிருந்த காலகட்டத்தில் பவித்ராவுக்கு திடீரென விபத்து ஏற்பட்டதாம். அந்த விபத்தில் அவரது முகம் மொத்தமாக சிதைந்து விட்டதாம்.

அதன் பிறகு தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் தன்னுடைய முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். எப்போதுமே சிரித்து மகிழும் பவித்ரா லட்சுமியின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சோகமா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்ணீர் வடிக்கின்றனர்.