“போய் எதாச்சும் உருப்படியா செய்யுங்க” சர்ச்சை போட்டோவுக்கு பதிலடி கொடுத்த ரைசா !

434

ரைசா வில்சன்…

பிக் பாஸ் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் ரைசா வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன்.

அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார்.

அழகு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட ரைசா வில்சன், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி, முகப்பொலிவுக்கான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும்,

அதன் பிறகு தனது பழைய பொலிவ்வுள்ள முகம் திரும்பி வந்துவிட்டது. இந்த நிலையில் அடுத்த சர்ச்சையாக சமீபத்தில் ரைசா பதிவு செய்த உச்சகட்ட கிளாமர் புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகைப்படங்களுக்கு ஏராளமான Negative கமெண்ட்ஸ்கள் வந்தது.

தற்போது இந்த கமெண்ட்ஸ்களுக்கு ரைசா, தற்போது பதிலடி கொடுத்துள்ளார். எதிர்காலத்தில் இதே மாதிரி எதிர்மறை எண்ணங்களுடன் நீங்கள் இருந்தால் உங்க வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. என்னை பொறுத்தவரை நடிகை ஒருவர் பிகினி அணிவது என்பது சர்வ சாதாரணமான ஒரு விஷயம்.

இதற்கு நெகடிவ் ஆக கமெண்ட்ஸ் செய்வதை விட்டுவிட்டு உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்” என்று எதிர்மறையாக கமெண்ட் செய்தவர்கள் எல்லோரையும் வறுத்து எடுத்து விட்டார்.