சன்டிவிக்கு அபராதம்!!
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியலில் இடம்பெற்ற ஆபாச காட்சிகளுக்காக ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை தொடர்கள் என்றாலே சன்டிவி தான், இன்றுவரையிலும் டாப் 5 இடங்களில் பெரும்பாலும் சன்டிவி தொடர்களே இடம்பெற்றுள்ளன.
மாலை நேரங்களில் சன்டிவி சீரியலே பார்க்காதவர்களே குறைவு என்று கூறும் அளவுக்கு பெரும்பாலான வீடுகளை அலங்கரித்துள்ளன.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணியளவில் ஒளிபரப்பாகும் கல்யாண வீடு சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
இந்த சீரியலில் மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒளிப்பரப்பப் பட்ட எபிசோட்களில் கூட்டுப்பலாத்காரக் காட்சிகளும் அது பற்றிய தீவிரமான வசனங்களும் இடம் பெற்றிருந்தன.
இதற்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்ததுடன், பிசிசிசி அமைப்புக்கும் புகார்கள் சென்றன, இதனை தொடர்ந்து சன் டிவிக்கு 2.5 லட்ச ரூபாய் அபராதமும் சன் நெக்ஸ்ட் தளத்தில் அந்த காட்சிகளை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கல்யாண வீடு சீரியல் ஒளிப்பரப்பாகும் போது 30 வினாடிகள் கொண்ட மன்னிப்பு காட்சிகளையும் ஒளிப்பரப்ப வேண்டுமெனக் கூறியுள்ளது.