பிக்பாஸ் சீசன் 3க்கு குரல் கொடுப்பவர் யார்? அது கடவுள் கொடுத்த வரம்.. ஓபனாக பேசிய பிரபலம்!!

918

பிக்பாஸ் சீசன் 3க்கு குரல் கொடுப்பவர் யார்?

பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஜூன் மாதம் 23 ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய 20 நாட்கள் தான் இருக்கிறது. இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் குரல் கொடுக்கும் பிரபலமான கோபி நாயர் நேர்காணல் ஒன்றில் பிக்பாஸ் குறித்து அவர் பேசியுள்ளார்.

கடந்த இரண்டு சீசன்களிலும், பிக்பாஸ் குரல் கொடுப்பவர் இவர் தான் என பல வதந்திகள் வந்தன. அதுபோல இந்த பிக்பாஸ் சீசனிலும் குரல் கொடுப்பவர் இவர் தான் என்று கூறிவந்த நிலையில் தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில், சத்தியமாக பிக்பாஸ் வாய்ஸ் நான் கொடுக்கவில்லை. பிக்பாஸ் குரல் கொடுப்பவர் யாரென்றே எனக்கு தெரியாது. அவரை பார்க்கவும் முடியாது. காரணம் , அவரின் உருவம் வெளியே தெரிந்துவிட்டால் அந்த கர்ஜனையான குரல் சாதாரணமான குரலாக எண்ண நேர்ந்துவிடும். அதனால் அவரின் உருவம் கடைசி வரை வெளியே காட்ட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும், இந்த சீசனில் அந்த குரல் சற்று தொய்வை சந்திக்கிறது என்றே கூறலாம். அந்த குரலை கண்டால் முதல் இரண்டு சீசன்களில் மிரளுவார்கள். ஆனால் தற்போது அப்படி நிகழுவதில்லை. தலைகீழாக மாறியுள்ளது.

இன்னும் 20 நாட்கள் உள்ளது. போட்டியாளர்களை பிக்பாஸ் சுண்டி இழுக்க வாய்ப்பிருக்கிறது. அந்த குரலின் கர்ஜனை மேலோங்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கவின், 80 நாட்கள் தெரிந்து கொள்ளாததையா இனிமேல் தெரிந்துகொள்ள போகிறேன் என்று கூறினார். அவர் அவ்வாறு கூறுவது தவறு, தெரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. திருத்திக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காதல் என்பது ஒரு புனிதமான விஷயம். அதை மற்றவர்கள் விமர்சிக்கும் விதமாக கவின் செய்யும் செயல்கள் வருத்ததிற்குரியதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

லாஸ்லியா வெளிநாட்டிலிருந்து தன்னந்தனியாக வந்து தைரியமாக விளையாடிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் .மேலும், தர்ஷன் ஒரு வலிமையான போட்டியாளர் என்று கூறியுள்ளார்.