அக்ஷயா…
சில படங்கள் சுமாராக இருந்தால் சிறிது காலம் கழித்து அந்த படம் நம் நினைவிலிருந்து மறைந்து போய்விடும். சுமாரான படத்துக்கே அந்த கதி என்றால், அந்த படத்தில் நடித்திருந்த கதாபாத்திரங்களின் ஆயுட்காலம் பற்றி உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறோம்.
அந்த வகையில் சுமாரான படமான கலாபக் காதலன் படத்தில் ஆர்யா, நடிகை ரேணுகா மேனன் நடித்திருந்தனர். இதில் ஆர்யாவை ஒரு தலையாக காதலிக்கும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷயா.
இவர் விஜயகாந்த் நடித்த எங்கள் ஆசான், கலைஞர் எழுத்தில் உருவான உளியின் ஓசை போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு எங்கு போனார்,
என்ன ஆனார் என்பதை தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு தற்போது இவரை பற்றிய தகவல் ஒன்று வந்துள்ளது. இப்போது நடிகையாக இருந்து திரைப்பட இயக்குநராக அவதரித்துள்ளார் அக்ஷயா.
இவர் இயக்கி கதாநாயகியாக நடித்த படம் யாளி. இந்த படம் குறித்து பேசிய அக்ஷயா, ” இந்த படம் நீண்ட போராட்டத்துக்கு பிறகு முடிந்திருக்கிறது, இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியும் நிலையில் உள்ளது, மேலும் கொரோனா சூழல்கள் முடிந்து விரைவில் வெளியாகவிருக்கிறது” என்று கூறியுள்ளார்.