THE FAMILYMAN 2 WEB SERIES – இல் நடிக்க சமந்தாவுக்கு கொடுக்கப்பட்ட பெரிய சம்பளம் ! அதிர்ச்சியில் திரையுலகினர் !

402

சமந்தா…

2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”,

“சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படி இருக்கும் நிலையில், நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி,

ஆகிய மொழிகளில் வெளியாகி சர்ச்சைகள் கிளப்பிய ‘தி ஃபேமிலிமேன் 2 ‘ தொடரில் நடிக்க நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதில் நடிக்க சமந்தா 3 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.

அவர் திரைப்படங்களில் நடிக்க 1 அல்லது ஒன்றரை கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த வெப் தொடருக்காக இரண்டு, மூன்று மடங்கு சம்பளம் வாங்கி உள்ளார் என்கிற தகவல் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தத் தொடரில் நடித்த பிரியாமணிக்கு 80 லட்சம் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.